இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
நமது வாழ்வில் பொருமையும், நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் மலரும்
தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டானது, அனைவரினது இடர்களையும் துயர்களையும் போக்குகின்ற ஓர் புதிய ஆண்டாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். மேலும்
தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரினதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக, கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
புதிதாக பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த 2025 விசுவாவசு புத்தாண்டு பிறப்பானது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும், அமைதியும், சுபிட்சமும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.