2025 உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு சேவைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, ஒரு நாள் கடவுச்சீட்டு விநியோகத்துக்கான 24 மணி நேர சேவை மே 05, 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் நிறுத்தப்படும்.
இந்த காலகட்டத்தில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் 2025 மே 06 அன்று நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.