களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர், ஆபத்தான நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் வேட்பாளர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காயமடைந்த நபர் நாகொட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர்.
சம்பவம் குறித்து களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.