நாளைய தினம் நடைபெவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இருந்து 108 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பட்டிகள் இன்று காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரச அதிபர், குறிப்பாக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பட்டிகளும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன
மக்கள் நேர காலத்துடன் சென்று தங்களது வாக்குகளை அளிக்குமாறு தெரிவித்துள்ளதுடன் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.