பாகிஸ்தானில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நில நடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, இன்று காலை பாகிஸ்தானை சுற்றியுள்ள தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.