இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தெரிவித்ததாகவும்
இருப்பினும், அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் கோஹ்லியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விராட்கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கியமான இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரவிருப்பதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் . இருப்பினும், கோலி இன்னும் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை” என்றும் பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பணியாற்றிய ரோஹித் சர்மாவும் , சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.