ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களை குறிவைத்து இஸ்லாமபாத்துக்கு எதிரான பதிலடி இராணுவத் தாக்குதலான “ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் 22 நிமிடங்களில் இந்தியா பழிவாங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ராஜஸ்தானில் இன்று (22) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,
ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளின் ஒன்பது பெரிய மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம்.
இதன் மூலம், குங்குமம் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகத்தின் மற்றும் நாட்டின் எதிரிகள் பார்த்திருக்கிறார்கள்.
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 அன்று இந்திய பதிலடி இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.
அரசாங்க வட்டாரங்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 100 பயங்கரவாதிகள் இந்த நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா ஒன்றுபட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) 140 கோடி இந்தியர்களை பாதித்தது.
பயங்கரவாதத்தின் மையத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.
அரசாங்கம் இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்தது, ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – என்றும் அவர் கூறினார்.
இந்த உரைக்கு முன்னதாக ராஜஸ்தான், பிகானீருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தை வைத்தார்.
மேலும், பிகானீர்-மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் நிலையத்தைத் திறந்து வைத்த பின்னர், பிரதமர் மோடி பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தேஷ்னோக்கில் உள்ள கர்ணி மாதா ஆலயத்திலும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.