பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்திய தூதர் அனுபமா சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ” பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணில் இருந்தே செயற்படுகின்றார்கள் எனவும், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் பாகிஸ்தானில் உள்ள பயங்கர வாதிகளின் முகாம் மீதே இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.