நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியான அவர் நேற்றைய தினம் குறித்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 31தடவைகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். இப் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















