2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெதுவாக ஓவர் பரிமாற்றம் மேற்கொண்டதற்காக அணியின் தலைவர் ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மூன்றாவது முறையாக மெதுவாக ஓவர் பரிமாற்றங்களை மேற்கொண்ட சந்தர்ப்பமாகும்.
இதன் விளைவாக ரிஷாப் பந்துக்கு குறிப்பிடத்தக்க அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், நேற்றைய போட்டியில் பங்கெடுத்த அணியின் ஏனைய வீரர்களுக்கு 12 இலட்சம் இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் ஆகும்.