மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை இ.தொ.கா தலைமை காரியாலயம் கொழும்பு சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவின் பாரியார் ராஜலஷ்சுமி தொண்டமான், உட்பட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














