நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
1. தெமட்டகொடையில் சுவர் இடிந்து விழுந்தது
தெமட்டகொடையில் அமைந்துள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
2. கிரேண்ட்பாஸில் மரம் விழுந்ததில் வீடுகள் சேதம்
கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு மரம் முறிந்து விழுந்ததில், அப்பகுதியில் உள்ள ஆறு வீடுகள் சேதமடைந்தன.
3. மாளிகாவத்தையில் வாகனங்கள் சேதம்
மாளிகாவத்தையின் சில பகுதிகளில் மரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் விழுந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன.
4. கொழும்பில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்த சம்பவம்
பலத்த காற்று காரணமாக கொழும்பு முழுவதும் குறைந்தது எட்டு மரங்கள் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
5. ரயில் பாதைகள் பாதிப்பு
கடலோர, பிரதான, சிலாபம் மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதைகள் உட்பட அனைத்து முக்கிய ரயில் பாதைகளிலும் மரங்களும் மின் கம்பிகளும் விழுந்துள்ளன. ரயில்வே குழுக்கள் தண்டவாளங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.
06. நாட்டின் பல பகுதிகளில் மின் தடை
பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரத்தை மீட்டெடுக்க இலங்கை மின்சார சபை CEB) மேலதிக குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், மின் தடை ஏற்பட்டால், ‘CEBCare’ செயலி அல்லது 1987 என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7. மேலும் கனமழை எதிர்பார்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனால், ஏற்படும் அனர்த்தம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.