இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வருகின்ற சுண்ணாம்புக் கல் குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தள்ளது.
குறித்த விபத்து நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் 13 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லையென மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி கூறியுள்ளார்.
இதேவேளை விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் ஆறு முதல் எட்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மீட்புக்குழுவினரின் மீட்பு பணி தொர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

















