ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இளம் தம்பதியினர் இன்று (01) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெயங்கொட – புஞ்சி நைவலவத்த பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



















