கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.