இந்த ஆண்டு லோர்ட்ஸ் மைதானம் தனது முதல் ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தவுள்ளது.
இது ‘கிரிக்கெட்டின் தாயகத்தில்’ நடத்தப்படும் பல புகழ்பெற்ற நிகழ்வுகளின் பட்டியலில் அண்மையது.
இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒன்பது உலகக் கிண்ண நிகழ்ச்சிகளைப் பற்றிய ஒரு பார்வை இங்கே:
1975 – மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா
முதல் ஐ.சி.சி ஆடவர் உலகக் கிண்ணம் லோர்ட்ஸில் நடந்தது.
இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டியில் கிளைவ் லாயிட் அதிகபட்சமாக 102 ஓட்டங்களை எடுத்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி இயன் சாப்பல் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கு 292 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 58.4 ஓவர்களில் 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
1979 – இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள்
1979 ஆம் ஆண்டும் தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் தங்கள் தோல்வியற்ற பயணத்தை நீடித்தது.
இறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியனானது.
விவ் ரிச்சர்ட்ஸின் 138 ஓட்டங்கள் மேற்கிந்தியத்தீவுகள் அணியை ஒரு தடுமாற்றத்திலிருந்து காப்பாற்ற உதவியது.
ஏனெனில், இன்னிங்ஸ் முடிவில் அவர்கள் 286 ஓட்டங்களை எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜோயல் கார்னரின் ஐந்து விக்கெட் எடுப்பு இங்கிலாந்தை 194 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய உதவியது.
1983 – இந்தியா – மேற்கிந்திய தீவுகள்
1983 ஆம் ஆண்டு லோர்ட்ஸில் நடந்த இறுதிப் வெற்றி பெறும் மேற்கிந்தியத்தீவுகளின் போக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த முறை கிண்ணம் மீதான மேற்கிந்தியத் தீவுகளின் மோகம் முடிவுக்கு வந்தது.
184 என்ற இலக்கினை நோக்கி பதலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 140 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
மொஹிந்தர் அமர்நாத் இறுதி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியா தங்கள் மொத்த 183 ஓட்டங்களை வெற்றிகரமாக பாதுகாத்தது.
1993 – இங்கிலாந்து – நியூசிலாந்து
லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்தை வீழ்த்தியது.
ஜான் பிரிட்டன் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை எடுத்து தனது அணியை ஐந்து விக்கெட்டு இழப்புக்கு 195 ஓட்டங்கள் என்ற நிலைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
1999 – பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா
1999 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலியாவை இரண்டாவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக்கு ஷேன் வார்ன் உத்வேகம் அளித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 132 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
ஷேன் வார்ன் 33 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சேஸிங்கில் அவுஸ்திரேலியா 20.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
2009 – இங்கிலாந்து – நியூசிலாந்து
முதல் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி லோர்ட்ஸில் நடத்தப்பட்டது.
நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து வெறும் 85 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
கேத்தரின் பிரண்ட் ஆறு ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்ன சேஸிங் செய்த இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு தனது இலக்கை எட்டியது.
இங்கிலாந்து அணிக்காக கிளேர் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 ஓட்டங்களை எடுத்தார்.
இதன் மூலம், முதல் முதலாக டி20 மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணங்களை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் இங்கிலாந்து மகளிர் அணி பெற்றது.
2009 – இலங்கை – பாகிஸ்தான்
2009 ஆம் ஆண்டு லோர்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் தனது முதல் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணப் பட்டத்தை வென்றது.
குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் ஆறு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களை எடுத்திருந்த இலங்கையை மீட்பு பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலையை எதிர்கொண்டனர்.
சங்கக்கார ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 139 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தார்.
பின்னர் சேஸிங் சயெ்த பாகிஸ்தான் அணி, ஷாஹித் அப்ரிடியின் 54 ஓட்டங்கள் எட்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.
2017 – இங்கிலாந்து – இந்தியா
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அன்யா ஷ்ருப்சோல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் சேஸிங் செய்த இந்தியா 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அன்யா ஷ்ருப்சோல் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2019 – நியூசிலாந்து – இங்கிலாந்து
லோர்ட்ஸில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு அசாதாரண இறுதிப் போட்டி நடந்தது.
இங்கிலாந்து இறுதியாக ஐ.சி.சி ஆண்கள் உலகக் கிண்ணத்தை மிகவும் வியத்தகு முறையில் கைப்பற்றியது.
50 ஓவர்களில் இரு அணிகளும் 241 ஓட்டங்கள் எடுத்த பின்னர், போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவர்களிலும் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க இரு அணிகளது பவுண்டரிகளும் கணக்கிடப்பட்டது.
இங்கிலாந்து 26 பவுண்டரிகள் அடித்து முன்னிலையில் இருந்தமையினால் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.