கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வானது சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது .
இருபது உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக பத்து உறுப்பினர்களும் ,தேசிய மக்கள் சக்தி சார்பாக மூன்று உறுப்பினர்களும் ,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக மூன்று உறுப்பினர்களும் ,ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு 01-ஒரு உறுப்பினரும் , சுயேட்சைக்குழு 02 -ஒரு உறுப்பினரும் என இருபது உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.