இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க தனது 91 ஆவது வயதில் காலமானார்.
ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக இருந்தார்.
இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், 1988 முதல் 1991 வரை இராணுவத் தளபதியாக ஜெனரல் வனசிங்க பணியாற்றினார்.
இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தேசிய பாதுகாப்புப் பொறுப்புகளை வகித்தார்.
இவர், தனது சேவை மற்றும் தலைமைத்துவத்திற்காக இலங்கை இராணுவத்தின் உயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.















