ஒபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், இராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இந்தத் தாக்குதலில், ஈரானின் முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது பகேரி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படைத் தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல். அப்தொல்ரஹிம் மௌசவி என்பவரும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவராக முஹம்மது பக்போர் என்பவரையும் அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நியமித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.