ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை ஏவியதன் மூலம் “சிவப்புக் கோட்டை” மீறிவிட்டதாகவும் இதற்கு ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தாக்குலுக்கு பதிலடியாகவும் , ஈரானின் “தீவிர மற்றும் உறுதியான” முதல் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றதுடன் டெல் அவிவ் பெருநகரப் பகுதியில் இந்தத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.