யாழில் 10 போதை மாத்திரைகளுடன் 25வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம்(13) நடைபெற்ற நிலையில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் குறித்த போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.