அஹமதாபாத்தில் எயார் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்த விவகாரத்தையடுத்து எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் 787-8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து பணியகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி குறித்த விமானங்களில் ஹைட்ரோலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தின் எரிபொருள், மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய விமான போக்குவரத்து பணியகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.