இந்திய பிரதமர் மோடி நாளையதினம் (15) முதல் 4 நாள் அரசு முறை பயணமாக கனடா, சைப்ரஸ் நாடுகளுக்கு பயணமாகவுள்ளார்.
கனடாவில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் கனடா செல்லவுள்ளார்.
நடப்பாண்டிற்கான ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ள நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
அமெரிக்கா, பிரித்தனியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய, ‘ஜி – 7’ அமைப்பு, குறித்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விடயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.