ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை, ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து ஆக்கிரமிப்புச் செயல்களை நடத்தி வருகிறது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.