இஸ்ரேல், ஈரான் மோதல் மூன்றாவது நாளாக நீடித்து வருகின்றது . இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா போன்ற நகரங்கள் மீது ஏராளமான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்தது.
மின்சாரம் மற்றும் எரிவாயு நிலைகளை குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு இளம்பெண் உட்பட 3 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஷஹ்ரன் ((Shahran)) எண்ணெய் கிடங்கு மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்தபோதும், எண்ணெய் குறைவாக இருந்ததால் நெருப்பை கட்டுப்படுத்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.