ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார்.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அவர்களால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது, இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.