இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வலுவான அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதில் பல முக்கிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களான டாஸ்கின் அகமட் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு 16 பேர் கொண்ட வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியைத் தவறவிட்ட பங்களாதேஷ் அணியின் டி20 கிரிக்கெட் தலைவர் லிட்டன் தாஸ் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறாமல் போன அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களில் ஷமிம் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் மற்றும் முகமட் நைம் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் மொத்தம் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஜூலை 2 மற்றும் ஜூலை 5 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறும்.
ஜூலை 8 ஆம் திகதி இறுதிப் போட்டிக்காகத் தொடர் பல்லேகலேவுக்கு மாறும்.















