தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி,
நேற்று ( ஜூன் 30) இரவு 11:00 மணியளவில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்த பின்னர், அந்தக் குழு கைது செய்யப்பட்டு, அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடிக்காக இந்திய மீனவர்கள் இந்த வாரத்தில் கைது செய்யப்படும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தனர்.
இதன்போது, அவர்களின் இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்யுமாறும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.














