பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள குழுவைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்கப்படும் நாராதொட்ட ஹேவகே சமில் அஜித் குமார உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தெவுந்தர குடு சமில்” சுகயீனம் காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றுக்கு செல்வதற்காக வேனில் பயணித்த 5 பேரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் தெவுந்தர குடு சமிலுக்கு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது