உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார்.
கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.