காசா முழுவதும் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசா நகரின் வடகிழக்கே உள்ள துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசியில் ஒரு கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் பகுதியில் கூடாரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகரின் வடக்கே உள்ள ஷேக் ரத்வானில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் அப்பகுதியில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் 12 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.