சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய, சீதாவக்கபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பொலிஸ் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு நேற்று (06) இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, திறந்த பிடியாணை பெற்ற 07 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 19 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் 900க்கும் மேற்பட்ட பொலிஸார் , சிறப்பு அதிரடிப்படை மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

















