விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றபனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவருடைய மகளான மகளான 21 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


















