வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின்போது முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி உள்ளிட்ட மூவரும் காயமடைந்து வெல்லவாய அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவெல, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.














