பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன.
இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வழியாக கடந்த சில ஆண்டுகான அதிகளவிலான புகலிடக்கோரிக்கையானர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த விடயம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.















