2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட குறித்த நபர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நிமித்தம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் குறித்த நபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














