• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியர்களுக்கு நன்றி – சுபான்ஷு சுக்லா

இந்தியர்களுக்கு நன்றி – சுபான்ஷு சுக்லா

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது எனவும்  தன்  மீதும் தனது பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி எனவும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா  தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா,  தனது விண்வெளிப் பயணம் குறித்து சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. 39 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவருடன் மேலும் 3 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தை நாசாவுடன் இணைந்து நடத்த முடிவு செய்தது. இந்த திட்டத்தில் நாசாவுடன், இஸ்ரோவும் கைகோர்த்தது. இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லாவை, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்தது.

இதையடுத்து ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வுப்பணிக்காக இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லாஇ அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன்இ ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் தேர்வானார்கள்.

இந்த விண்வெளி ஆய்வுக்குழுவினர்இ அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் இணைக்கப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 25 ஆம் திகதி விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.

பால்கன்-9 ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் புவிவட்டபாதையை அடைந்தது. அதில் இருந்து டிராகன் விண்கலம் தனியாக பிரிந்துஇ சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணித்து. சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பின்னர், 26-ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை டிராகன் விண்கலம் அடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன்இ டிராகன் விண்கலம் இணைக்கப்பட்டதும்இ அதில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்களை ஏற்கனவே இருந்த வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.

தங்களது பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4.40 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் 4 பேரும் புறப்பட்டனர்.

விண்கலம் பூமியை நெருங்கும்போது பாராசூட்டுகள் 2 நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக முதலில் நேற்று பகல் 2.57 மணிக்கு பூமியில் இருந்து சுமார் 5.7 கிலோ மீட்டர் உயரத்தில் பாராசூட்டுகள் விரிந்து விண்கலத்தின் வேகத்தை குறைந்தது.

தொடர்ந்து, பூமியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் உயரத்தில் விண்கலம் வந்தபோது, பிரதான பாராசூட்டுகள் விரிந்தது. அது விண்கலத்தின் வேகத்தை முற்றிலுமாக குறைத்தது.

சுமார் 22.5 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று மாலை 3.01 மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் டிராகன் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

விண்கலம் கடலில் இறங்கியதும்,அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அமெரிக்கா கடற்படையினர் விண்கலத்தை மீட்டு, அங்கிருந்த மீட்பு கப்பலில் ஏற்றினர். பின்னர் விண்கலத்தின் கதவுகள் மாலை 3.40 மணிக்கு திறக்கப்பட்ட உடன், திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் முதலில் வெளியே வந்தார். அவரை தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாஇ போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு ஆகிய 4 பேரும், கையசைத்தப்படி வெளியே வந்தனர்.

18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம் மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIAISRONasaசுபான்ஷு சுக்லா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலைவன் தலைவி திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது!

Next Post

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

Related Posts

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

2026-06-16
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!
இலங்கை

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

2026-06-16
Next Post
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு நீதிமன்றுக்கு வருகை!

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்; உறுதிப்படுத்தப்பட்ட போட்டி திகதி!

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்; உறுதிப்படுத்தப்பட்ட போட்டி திகதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.