தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிற்கு அருகிலுள்ள ஒரு சந்தைப் பகுதியில் திங்கட்கிழமை (28) ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நகரின் சதுசாக் (Chatuchak) மாவட்டத்தில் உள்ள ஓர் டோர் கோர் சந்தையில் இந்த சம்பவம் நடந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



















