இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான 75 வருட தூதரக உறவினைக் கொண்டாடும் விதமாகவும், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக நேற்றைய தினம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து நேற்றைய தினம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு இடையில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தவுள்ளனர். இதன்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















