இந்தியாவில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன.
அதன்படி, ரெட்மியும் ரெட்மி 15 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
ரெட்மியிடம் இருந்து வெளியான இந்த தகவல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
பெரிய பேட்டரி, மேம்பட்ட அம்சங்கள் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெட்மி 15 5G நாளை இந்தியாவில் அறிமுகமாகும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரெட்மியின் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.
விலை பற்றிய தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் ரெட்மி 15 5G மலிவு விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த phone 7000mAh பேட்டரியுடன் வருகிறது. 18W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் மூலம் மற்ற சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம். சிலிக்கன் கார்பன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


















