ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக நளின் பண்டார கேள்வி எழுப்புகையில்” முன்னாள் சுகாதார அமைச்சுருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மருந்து மோசடி விவகாரத்தில் தரவுகள் அழிக்கப்பட்டமை பாரிய பிரச்சினையாகும்.
தொழிநுட்ப உதவியாளர்கள் மாத்திரமல்ல இதற்கு பின்னால் பாரிய ஒரு மோசடி வலையமைப்பு உள்ளதாகவே தெரிகிறது. எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனரா?”எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி” ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள், அழிக்கப்பட்டமை தொடர்பாக நாம் கவனம் செலுத்தியுள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் வெளிக்கொணரப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
















