ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு (31) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்கள் பலரும் நகங்கர் மாகாணத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 800ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.
இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
கட்டிடங்கள் குலுங்கி, பல வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் பல அப்பாவி குழந்தைகளும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்தடுத்து நிகழ்ந்த 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரையிலும் உணரப்பட்டன.














