போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலமான 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் (இழுவை ஊர்தி) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 18 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக லிஸ்பனின் அவசர சேவைகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை (03) மாலை 6:05 மணியளவில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.
இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்படவில்லை.
இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா தனது இரங்கலை தெரிவித்தார்.
ஃபுனிகுலர் என்பது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஒரு வகை ரயில் அமைப்பு.
இது மலையின் மேல் தளத்திலிருந்து கேபிள் கம்பி மூலம் மின் விசையால் இயக்கப்படும்.
குளோரியா ஃபுனிகுலர் லிஸ்பனில் உள்ள மிகவும் பிரபலமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இது 1885 இல் ஆரம்பிக்கப்பட்டது, மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மின்மயமாக்கப்பட்டது.



















