வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு (21) லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியாவின் ஹாவா எலியா பகுதியைச் சேர்ந்த மனித் அபுர்வ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.
















