களுத்துறை, பாலத்தோட்டா பகுதியில் நபர் ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், துப்பாக்கிச் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 9 மிமீ ரக பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் வெடிக்காத 2 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் களுத்துறை தெற்கு காவல்துறை இணைந்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














