• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மகளிர் உலகக் கிண்ணம்; பாகிஸ்தானின் வெற்றிக் கனவு கலைந்தது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/16
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கிண்ணத்தின் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையினால் எந்த முடிவும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது.

இதனால், இங்கிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை ரூஷிப்பதற்கு காத்திருந்த பாகிஸ்தான் மகளிர் அணியின் கனவு கலைந்து போனது. 

நேற்று ஆரம்பமான 2025 மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர்.

அமே ஜோன்ஸ் (8 ஓட்டம்), டாமி பீமோன்ட் (4 ஓட்டம்), தலைவர் நாட் சிவெர் (4 ஓட்டம்) ஆகியோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 

இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்டு இழப்புக்கு 75 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. 

இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது. 

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை சேர்த்தது. 

இங்கிலாந்துக்காக அதிகபட்சமாக சார்லி டீன் 33 ஓட்டங்களை எடுத்தார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 6 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 27 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெண்கள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் டக்வொர்த்- லூவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 113 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

நம்பிக்கையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. 

தொடர்ந்து மழை பெய்தமையினால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 

இதனால், பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவு கலைந்தது.

அத்துடன், இது பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கைக்கு குறிப்பிடத்தக்க அடியாக அமைந்தது.

முடிவில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

நடப்பு தொடரில் மழையால் இரத்தான 3 ஆவது ஆட்டம் இதுவாகும். 

இந்த மூன்று ஆட்டங்களும் இதே மைதானத்தில் நடந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: EnglandgPakistanWorld Cup 2025
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை; 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் அபராதம்!

Next Post

அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!

Related Posts

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-01-26
5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000
ஆசிரியர் தெரிவு

மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.
விளையாட்டு

மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
மலையகம்

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
Next Post
அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!

அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்!

அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்!

அமுலுக்கு வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்!

ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

0
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

0
5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000

5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000

0
மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

0
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.