மலையகச் சொந்தங்களை மகிழ்விப்பதற்காக தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழ் FM, ஆதவன் தொலைக்காட்சி இணைந்து “தித்திக்கும் தீபாவளி – சரவெடி” நிகழ்வை வழங்க உள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பசறை – கிக்கிரிவத்தை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத் திடலில்- காலை 8 மணிக்கு – தீபாவளி சிறப்புப் பூஜை வழிபாடுகளும் தொடர்ந்து கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இதை அடுத்து மாலை 06 மணிக்கு இலங்கையின் புகழ் பூத்த – இசைக்குழு – குருவின் “ஜதி” யின் இசையில் – இன்னிசை நிகழ்ச்சி இடம்பெற்றள்ளது.
தமிழ் FM மற்றும் ஆதவன் தொலைக்காட்சியுடன் இணைந்து – தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடி மகிழ அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.














