இங்கிலாந்தில் முதல் முறையாக வீடு வாங்கும் இளம் மக்கள், தற்போது பசுமைச் சூழல் இல்லாத பகுதிகளில்தான் வீடுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான குடியிருப்புகள் உருவாக்கும் கொள்கையில் தோல்வியடைந்தமையே இதற்கு காரணம் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
அந்த ஆய்வின்படி, ஒரு பகுதியிலிருந்து ஒரு சதுர மீட்டர் பசுமை நிலம் குறைந்தாலும் அங்கு வீட்டு விலைகள் குறைவாக இருப்பதான் காரணமாகவும் அங்கே சுமார் 500 புதிய இளம் வாங்குநர்கள் வீடுகள் வாங்க வருகிறார்கள்.
இதனால் இளம் மக்கள் “பசுமை இல்லாத பாலைவனப் பகுதிகளில்” வாழ வேண்டியதாகியுள்ளது.
இது அவர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசாங்கம் வீடுகள் மட்டுமல்ல, பசுமை இடங்களையும் சேர்த்து உருவாக்க வேண்டும் எனவும் பூங்கா, நீர்நிலை, மரங்கள் போன்றவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், புதிய வீட்டு திட்டங்களில் பசுமை இடங்கள் கட்டாயம் சேர்க்கப்படும் சட்ட மாற்றங்களை விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் கோரியுள்ளன.














