இங்கிலாந்தில் நடைபெற்ற FA Trophy கால்பந்து போட்டியின் நடுவே வீரர் ஒருவர் கடுமையாக காயம் அடைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
டார்செஸ்டர் டவுன் (Dorchester Town) அணியின் வீரரும் பயிற்சியாளருமான வெஸ் ஃபாக்டன், (Wes Fogden) சனிக்கிழமை பிற்பகல் பேசிங்ஸ்டோக் (Basingstoke) அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பாதியில் காயமடைந்தார்.
மருத்துவ பரிசோதனையில், கழுத்தில் இரண்டு எலும்புகள் முறிந்துள்ளன என்று உறுதி செய்யப்பட்டது.
அவர் சில வாரங்கள் கழுத்துக்கட்டு (neck collar) அணிந்து சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
போட்டி இடைநிறுத்தப்பட்டதால், குறித்த ஆட்டம் நாளைய தினம் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டார்செஸ்டர் கழகம் (Dorchester) வெளியிட்ட அறிக்கையில்,
“வெஸ் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு விரைவில் முழு நலம் கிட்ட வேண்டுமென எங்கள் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தது.
மேலும், பேசிங்ஸ்டோக் (Basingstoke) அணியின் மருத்துவ நிபுணர் சீனாக் மெக்கார்த்தி மற்றும் ரசிகர்கள் காட்டிய மரியாதைக்கும் நன்றி தெரிவித்துள்ளது.















