இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது.
இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த செலவுகள் 4.5 பில்லியன் இருந்த நிலையில் தற்போது 15.3 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது என அரசின் உள்நாட்டு பாதுகாப்பு, குடியிருப்பு, குற்றச்செயல்கள் போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை ஆய்வு செய்யும் ஹோம் அலர்ஸ் கமிட்டி (Home Affairs Committee) தெரிவித்துள்ளது.
புகலிட கோரியவர்களுக்கான தங்குமிடங்களை அமைக்கும்போது தற்போது சில குழப்பங்கள் நிலவுகிறது, அதை சரிசெய்ய அரசு முடிவு எடுக்கவேண்டும்.
எதிர்காலத்தில் புகலிடம் கோரியவர்களுக்கான தங்குமிடங்களை வழங்கும்போது சரியான முறையில் விலை நிர்ணயம் , உள்ளூர் சமூகத்துடன் நல்ல தொடர்பு, தேவைக்கேற்ப திடீர் மாற்றங்களுக்கு தயாராக இருக்க கூடிய நிலை உள்ளதா? என்று அவதானிக்கவேண்டும் என ஹோம் அலர்ஸ் கமிட்டி (Home Affairs Committee) குறிப்பிட்டுள்ளது.
புகலிடம் கூறியவர்கள் தங்கவைக்கப்படும் விடுதிகள் சரியாக செயல்படாவிட்டால் அதற்கான தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதனால் அரசு கூடுதலான லாபத்தையும் ஈட்டி கொள்ள முடியும்.
அத்துடன் அரசு இந்த அமைப்பில் நீண்ட கால திட்டம் உருவாக்க வேண்டும், தற்போது இது குறுகிய கால, பதிலளிப்பான நடவடிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது என ஹோம் அலர்ஸ் கமிட்டி (Home Affairs Committee) தெரிவித்துள்ளது.














